உத்தர பிரதேசத்தில் பயணிகளுடன் சாலையில் கவிழ்ந்த ஆட்டோவை கண்டு கொள்ளாமல் சென்ற அரசு அதிகாரிகள்


உத்தர பிரதேசத்தில் பயணிகளுடன் சாலையில் கவிழ்ந்த ஆட்டோவை கண்டு கொள்ளாமல் சென்ற அரசு அதிகாரிகள்
x

ஆட்டோ கவிழ்ந்ததை சற்றும் கண்டுகொள்ளாமல், அரசு அதிகாரிகளின் கார்கள் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தன.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் பகுதியில் குண்டும், குழியுமாக மழைநீர் தேங்கிய நிலையில் இருந்த சாலை வழியாக ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றியபடி சென்று கொண்டிருந்தது. அதே சமயத்தில் எதிர்புறம் இருந்து அரசு அதிகாரிகளின் கார்கள் வரிசையாக வந்து கொண்டிருந்தன.

அப்போது அந்த ஆட்டோ ஒரு குழியில் சிக்கி ஒரு பக்கமாக பக்கவாட்டில் சாய்ந்தது. இதனை சற்றும் கண்டுகொள்ளாமல், அந்த அரசு அதிகாரிகளின் கார்கள் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தன. ஆட்டோவில் சிக்கியிருந்த பயணிகள், அவர்களாகவே சிரமப்பட்டு ஆட்டோவில் இருந்து வெளியே வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

உத்தர பிரதேசத்தில் வரும் நவம்பர் 15-ந்தேதிக்குள் மாநிலம் முழுவதும் தரமான சாலைகள் அமைப்பதை மாபெரும் இயக்கமாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அண்மையில் கூறியிருந்தார். இந்த நிலையில், குழியில் கவிந்த ஆட்டோவை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் சென்ற சம்பவம் அங்கு அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.




Next Story