அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15-வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடித்து, உடன் நிறைவேற்றிட வேண்டும். 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதியின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும். மிகைப்பணி பார்க்காத டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். தொழிலாளர்களின் வார ஓய்வை பறிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் அம்பேத்கர் முன்னிலை வகித்தார். இதில் சம்மேளன துணைத்தலைவர் கண்ணன், நாகை மண்டல தலைவர் கோவிந்தராஜ், மண்டல பொதுச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் வைத்தியநாதன், துணை பொதுச்செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் கிளை செயலாளர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.