"செவிலியர்களுக்கு அரசு துணை நிற்கும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


செவிலியர்களுக்கு அரசு துணை நிற்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

செவிலியர்களுக்கு எப்போதும் அரசு துணை நிற்கும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள், தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை போராட்டம் நடத்தினர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். அதன் தொடர்ச்சியாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில், செவிலியர்கள் போராட்டம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

தகுதியுடைய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அதற்கான பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 8 செவிலியர்கள் சங்கம் உள்ளது. இதில் யார் போராட்டம் நடத்துகின்றனர் என தெரியவில்லை. போராடும் செவிலியர்கள் சார்பாக யாரும் எங்களை பார்க்க வரவில்லை.

நிதிநிலையைப் பொருத்து படிப்படியாகத்தான் பணி நிரந்தரம் செய்ய முடியும். எம்.ஆர்.பி (MRB) மூலம் தற்காலிகமாக பணிக்கு வந்தவர்களை மட்டுமே பணி நிரந்தரம் செய்ய முடியும். யாருடைய தூண்டுதலின் பேரிலும் வெயிலில் உடலை வருத்திக்கொண்டு செவிலியர்கள் போராட வேண்டாம். செவிலியர்களுக்கு எப்போது இந்த அரசு துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story