ஆலைக்கு சென்று தீப்பெட்டி தயாரிப்பை பார்வையிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி


ஆலைக்கு சென்று தீப்பெட்டி தயாரிப்பை பார்வையிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி
x

விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி, தீப்பெட்டி ஆலைக்கு சென்று அங்கு நடக்கும் உற்பத்தியை பார்வையிட்டார். காமராஜர் நினைவு இல்லத்திலும் மரியாதை செலுத்தினார்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி, தீப்பெட்டி ஆலைக்கு சென்று அங்கு நடக்கும் உற்பத்தியை பார்வையிட்டார். காமராஜர் நினைவு இல்லத்திலும் மரியாதை செலுத்தினார்.

ராஜபாளையம்-சிவகாசி

தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று விருதுநகர் மாவட்டம் வந்தார்.

ராஜபாளையம் பி.எஸ். குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மத்திய அரசின் விசுவகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களை சந்திப்பு, கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

சிவகாசியில் நடந்த 'ஆளுனரின் எண்ணித்துணிக' என்ற தலைப்பில் தொழில் அதிபர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவர்னருக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாலை கவர்னருக்கு அணிவிக்கப்பட்டு ஆண்டாள் கிளி வழங்கப்பட்டது.

சாத்தூர்

சாத்தூர் பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்றார். அங்கு தீப்பெட்டிகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டு பேக்கிங் செய்யப்படுகிறது என்பதை பார்வையிட்டார். தீப்பெட்டி தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலை வளாகத்தில் நடைபெற்ற தீப்பெட்டி தொழிலாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பட்டாசு, தீப்பெட்டி தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை போக்க உங்களது கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்தார்.

காமராஜர் நினைவு இல்லம்

விருதுநகரில், பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அவரை கலெக்டர் ஜெயசீலன், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த அரிய புகைப்படங்களை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் காமராஜருக்கு புகழாரம் சூட்டி தனது கருத்தை பதிவிட்டார். கவர்னருக்கு காமராஜர் சிலையை நினைவுப்பரிசாக கலெக்டர் வழங்கினார். பின்னர் அங்கிருந்து மதுரை விமான நிலையத்துக்கு காரில் வந்த கவர்னர், விமானத்தில் ெசன்னை சென்றார்.


Next Story