அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து கவர்னர் மாளிகை விளக்கம்


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து கவர்னர் மாளிகை விளக்கம்
x

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு குறித்து கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக கவர்னர்ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், இது குறித்து கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், பிவி ரமணா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சிபிஐயின் விசாரணையில் உள்ளது. கேசி வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், எம்.ஆர் விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை" என்று கவர்னர்மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

1 More update

Next Story