கும்மிடிப்பூண்டியில் லாரி மீது அரசு பஸ் மோதல் - 5 பேர் படுகாயம்


கும்மிடிப்பூண்டியில் லாரி மீது அரசு பஸ் மோதல் - 5 பேர் படுகாயம்
x

கும்மிடிப்பூண்டியில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

திருவள்ளூர்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி தமிழக அரசின் ஏ.சி. பஸ் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. பஸ்சை பூந்தமல்லியை சேர்ந்த டிரைவர் சிட்டிபாபு (58) என்பவர் ஓட்டிச்சென்றார். கண்டக்டராக காரனோடையை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் பணியில் இருந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் ஏ.சி. பஸ் செல்லும் போது, அதே திசையில் முன்னால் சென்ற லாரியின் பக்கவாட்டில் எதிர்பாராத விதமாக பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் இடதுபுற பக்கவாட்டு பகுதி சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் கண்டக்டர் சுரேஷ், பயணிகளான சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுந்தர் (58), புதுகும்மிடிப்பூண்டி ஜெயந்தி (40), சேலம் மாவட்டம் ஆத்தூரைச்சேர்ந்த சிலம்பரசன் (18), ஈக்காட்டுதாங்கலைச்சேர்ந்த பிரபாகரன் (35) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 5 பேரும் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களை கும்மிடிப்பூண்டி எம்.ஏல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் 3 பேர் மட்டும் (கண்டக்டர் சுரேஷ், சிலம்பரசன், பிராபாகரன்) மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story