வேலூரில் குடியாத்தம் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி - ஐ.பி.எல். பாணியில் நடைபெற்ற ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி


வேலூரில் குடியாத்தம் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி - ஐ.பி.எல். பாணியில் நடைபெற்ற ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி
x

ஏலம் எடுக்கும் நிகழ்ச்சியில் குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் இருந்து 370 வீரர்கள் பங்கேற்றனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 'குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக்' என்ற போட்டி நடைபெற உள்ளது. இதில் 12 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், தொடரில் பங்கேற்க உள்ள அணிகளுக்கான கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஏலம் எடுக்கும் நிகழ்ச்சியில் குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் இருந்து 370 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய அளவில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்காக வீரர்களை ஏலத்தில் எடுப்பது போல், அதே பாணியில் குடியாத்தம் பிரீமியர் லீக் போட்டிகளுக்காக வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஒவ்வொரு அணியும் 15 வீரர்களை தேர்வு செய்யலாம் எனவும், ஒரு வீரர் 5 முறை ஏலத்தில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி முதல் குடியாத்தம் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.Next Story