பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.எனவே காலிப்பணியிடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், காஞ்சீபுரம் என்ற முகவரியில் இந்த மாதம் 23-ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story