விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியீடு


விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியீடு
x

நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி திருவிழா வரும் 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இதனை விமரிசையாக கொண்டாட பக்தர்கள் தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நீர்நிலைகளில் கரைப்பதற்கு சிலைகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

* பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோலால் செய்யப்படாத விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்.

* மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.

* சிலைகளின் ஆபரணங்களை தயாரிக்க உலர்ந்த மலர்கள், வைக்கோல் ஆகியவற்றையும், பளபளப்பிற்காக மரங்களின் இயற்கை பிசினையும் பயன்படுத்தலாம்.

* சிலைகளுக்கு வர்ணம் பூச இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் பயன்படுத்த கூடாது.

* விநாயகர் சதுர்த்தியை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.


Next Story