டி.என்.பி.எஸ்.சி. குரூப்-7ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-7ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
x

தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-7ஏ பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-1 (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) பதவிக்கான கணிணி வழி எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

"தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் : 22/2023, நாள் 13.10.2023-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட குரூப்-7ஏ பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை- (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) 06.01.2024 முற்பகல் மற்றும் பிற்பகல் மற்றும் 07.01.2024 முற்பகல் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story