மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

தியாகதுருகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேலு, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் வேலை பார்த்து 50 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை ஊதிய பாக்கி வழங்காததை கண்டித்தும், குறைந்த ஊதியம் வழங்கிய வாரத்தை கணக்கெடுத்து அதில் மீதமுள்ள நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஊதியத்துடன் இழப்பீடு தொகையை கூடுதலாக சேர்த்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story