வகுப்பறையில் போதை பொருள் பயன்படுத்திய தலைமை ஆசிரியர் - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்


வகுப்பறையில் போதை பொருள் பயன்படுத்திய தலைமை ஆசிரியர் - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
x

தலைமை ஆசிரியர் வகுப்பறையில் போதை பொருட்களை பயன்படுத்தியதால் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

மயிலம்,

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளியனார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 62 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியராக குப்பு வேல்முருகன் பணிபுரிந்து வருகிறார்.

இவர் பள்ளி வகுப்பறையில் புகைபிடிப்பது, போதை பொருட்களை பயன்படுத்துவது, மாணவ, மாணவிகளை கிண்டல் செய்து, திட்டுவது உட்பட பலதரப்பட்ட தீய செயலில் ஈடுபட்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மாணவர்களுக்கு அத்தியாவதியமான அடிப்படை வசதிகளை செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளதாகவும் தெரிகிறது.

இதனால் மாணவர்கள் தங்களது பெற்றோரிடத்தில் கூறியதை அடுத்து பெற்றோர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வட்டார கல்வி அலுவலர் கோவர்த்தனன், மயிலம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்க்கு சென்று பெற்றோர்கள் இடத்தில் சமரசத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் சம்மந்தபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story