தஞ்சையில் பலத்த மழை


தஞ்சையில் பலத்த மழை
x

தஞ்சையில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தஞ்சாவூர்

பலத்த மழை

தஞ்சையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கத்தை போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று காலை தஞ்சையில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

மாணவர்கள் நனைந்தனர்

பின்னர் மழை நின்று லேசாக வெயில் அடிக்க தொடங்கியது. மாலையில் மேகம் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து திடீரென மழை பெய்தது. இந்த மழையால் பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். பலர் மழையில் நனைந்தபடியும், சில மாணவர்கள் ஆட்டோவிலும் சென்றனர். சில மாணவர்கள் தங்களது பெற்றோர் கொண்டு வந்த குடைகளை பிடித்து படி சென்றனர். இந்த மழையால் ஆற்றுப் பாசனத்தை நம்பி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதை தொடர்ந்து மாலையில் திருக்காட்டுபள்ளி, பூதலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக க அறுவடைக்கு தயாராக இருக்கும் குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை அடைந்தனர்.


Next Story