சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை.!


சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை.!
x
தினத்தந்தி 23 Sept 2023 8:58 PM IST (Updated: 23 Sept 2023 9:14 PM IST)
t-max-icont-min-icon

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது.

சென்னை,

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் தற்போது கனமழை பெய்துவருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், சேலையூர், செம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

மேலும், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, நந்தனம், எழும்பூர், கொளத்தூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்துவரும் கனமழை காரணமாக தாம்பரம்-மேடவாக்கம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதேபோல, செங்கல்பட்டிலும் மழை பெய்துவருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Next Story