தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
x

கோப்புப்படம் 

தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 480 கிலோ மீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-தென் மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.

இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் தென் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story