தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை மையம் தகவல்
x

கோப்புப்படம் 

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக வரும் 13 ஆம் தேதி வரை தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் கானப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story