சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை


சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை
x
தினத்தந்தி 6 Jun 2023 4:29 PM IST (Updated: 6 Jun 2023 4:35 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

சென்னையில் நேற்றும் நேற்று முன் தினமும் வெயில் வறுத்தெடுத்தது. நேற்று பிற்பகல் முதல் மாலை வேளை வரை நகரின் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. அதனால் எந்த பலனும் இல்லை. சில நிமிடங்கள் பெய்த லேசான மழையும் சூட்டை கிளப்பி, மக்களின் வேதனையைத்தான் வாங்கியது.

இந்தநிலையில் சென்னையில் காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை மெரினா,தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை ,சென்ட்ரல், புரசவைவாக்கம், எழும்பூர், சிந்தாரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், பெரம்பூர், கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோடை மழையால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story