சென்னை புறநகர் பகுதியில் கனமழை: தாம்பரம் மார்க்கெட் பகுதியில் புகுந்த மழைநீர்
சென்னை புறநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, தாம்பரம் மார்க்கெட் பகுதியில் மழைநீர் புகுந்தது.
தாம்பரம்,
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதியில் நேற்று இரவில் கனமழை பெய்தது. தாம்பரத்தில் பெய்த கனமழை காரணமாக மார்க்கெட் பகுதியில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டனர்.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பகுதியில் கனமழையால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் சிரமப்பட்டனர். தாம்பரம் சுரங்க பாலம் பகுதியில் மழைநீர் தேங்காமல் உடனடியாக மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த பணிகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கொட்டும் மழையில் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story