இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை தபால் நிலையம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் நேற்று மாலை கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாநகர தலைவர் கணேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 65 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர்.
Related Tags :
Next Story