"வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை" - அமைச்சர் செந்தில் பாலாஜி


வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை -  அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 20 March 2023 8:54 AM GMT (Updated: 20 March 2023 9:35 AM GMT)

தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது. முதல் அமைச்சர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமாக உழைத்து வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

சென்னை மெட்ரோவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியும், கோவை மெட்ரோவுக்கு ரூ.9 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மெட்ரோவுக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துறைக்கும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள், புதிய திட்டங்கள், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன. குறை சொல்லவேண்டும் என்பதற்காகவே சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், எடப்பாடி பழனிசாமி முழு நிதிநிலை அறிக்கையையும் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் கேட்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி குறுக்குவழியில் ஆட்சியில் அமர்ந்துவிட்டு தமிழக மக்களுக்கு துரோகத்தை செய்தவர். எனவே நிதிநிலை அறிக்கையை பற்றி அவர் கூறிய கருத்துக்கள் மிக மிக மட்டமானவை. அவர் அரசியல் செய்யவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கருத்துக்களை கூறியுள்ளார்.


Next Story