கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்


கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T00:15:19+05:30)

சி.முட்லூர் அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

கடலூர்

சிதம்பரம்,

சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், அரசாணை 56-ஐ அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு மண்டல தலைவர் சக்திநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் தேவேந்திரன், கிளை செயலாளர் ரோஷிணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story