"சிதம்பரம் நடராஜர் கோவிலை கைப்பற்றும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படவில்லை" - அமைச்சர் சேகர்பாபு


சிதம்பரம் நடராஜர் கோவிலை கைப்பற்றும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படவில்லை - அமைச்சர் சேகர்பாபு
x

சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா குறித்த ஆவணம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை,

சென்னை தண்டையார்பேட்டையில் நீர்நிலைகளுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோவிலை கைப்பற்றும் நோக்கில் எந்தவொரு செயலிலும் அறநிலையத்துறை ஈடுபடவில்லை என்று தெரிவித்தார். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோவில்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள், விதிமுறைகள் தான் சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலிலும் பின்பற்றப்படுவதாக அவர் கூறினார்.

மேலும் சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா யார் பெயரில் உள்ளது என்பது குறித்த ஆவணம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இந்த விவகாரத்தில் சட்டத்திற்குப் புறம்பாக தீட்சிதர்கள் செயல்பட்டால் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்தார்.


Next Story