சென்னையில் உக்ரைன் மருத்துவ மாணவர்கள் மனித சங்கிலி பேரணி..!


சென்னையில் உக்ரைன் மருத்துவ மாணவர்கள் மனித சங்கிலி பேரணி..!
x

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உக்ரைன் மருத்துவ மாணவர்கள் மனித சங்கிலி பேரணியில் ஈடுபட்டனர்.

சென்னை

சிந்தாதிரிப்பேட்டை:

உக்ரைன் மருத்துவ மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை லேங்க்ஸ் கார்டன் சாலையில் மனித சங்கிலி பேரணி இன்று நடைபெற்றது. இதில் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு சங்கத்தின் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக மருத்துவ படிப்பை பாதியில் விட்டுவிட்டு இந்திய மாணவர்கள் உடனடியாக நாடு திரும்பினர். இந்தநிலையில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் உக்ரைன் சென்று படிக்க மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் போர் முடியாத காலத்தில் எவ்வாறு மாணவர்களை அவர்களை அனுப்பி வைப்பது என பெற்றோர் கவலைபடுகின்றனர்.

இதற்கு மாற்று ஏற்பாடாக மாணவர்களுக்கு இங்குள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்து அவர்களது படிப்பை தொடர வழி செய்ய வேண்டும். அல்லது, உக்ரைன் நாட்டு பேராசிரியர்களை இங்கு வரவழைத்து, கல்லூரிகளில் வைத்து சிறப்பு வகுப்புகளாவது நடத்த வேண்டும். இல்லையெனில் வேறு எதாவது நாடுகளுக்கு சென்று படிக்க வழிவகை செய்து, படிப்பு செலவுகளை மாணவர்கள் ஏற்று கொண்டாலும், இதர செலவுகளையாவது அரசு ஏற்க வேண்டும். இது குறித்து மத்திய அரசு தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என அவர் கூறினார்.

1 More update

Next Story