திருத்தணி அருகே விபச்சார தொழில் நடத்திய கணவன்- மனைவி கைது


திருத்தணி அருகே விபச்சார தொழில் நடத்திய கணவன்- மனைவி கைது
x

திருத்தணி அருகே விபச்சார தொழில் நடத்திய கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கௌரியம்மன் தெருவில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக திருத்தணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கௌரியம்மன் தெருவில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திக்கொண்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த 2 பெண்ணிடம் விசாரித்த போது வேலை தருவதாக கூறி வீட்டில் அடைத்து வைத்து விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிவித்தனர். பின்னர் 2 பெண்களையும் எச்சரித்து சொந்த ஊருக்கு அனுப்பினர். வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த முரளி (வயது 46), இவரது மனைவி பிரமிளா (41) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story