பெரியகுளம் அருகே மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி அடுத்தடுத்து உயிரிழப்பு

பெரியகுளம் அருகே மாட்டுக்கொட்டகையில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பங்களாப்பட்டியைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் வீட்டிக்கு அருகே மாட்டு கொட்டகை அமைத்துள்ளார். மாடுகளுக்கு தீவனம் போட சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி ஹேமா, கணவனை தேடி சென்ற நிலையில், அரவிந்த் மாட்டு கொட்டகையில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த ஹேமா அரவிந்தை தூக்க முயன்றதால், அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஹேமா, அரவிந்தை தேடிச்சென்ற செந்தில்குமார் என்பவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். தகவலறிந்த போலீசார், மின்வாரிய ஊழியர்களின் உதவியோடு மின்சாரத்தை துண்டித்து, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாட்டு கொட்டகையில் மின்வாரிய அதிகாரி நடத்திய ஆய்வில், மின் வயர் சேதமடைந்து மின்கசிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.