"கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்" -காயத்ரி ரகுராம் டுவீட்


கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன் -காயத்ரி ரகுராம் டுவீட்
x

கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாக காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். ஆறு மாத காலத்திற்கு ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதம் நீக்கப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"நன்றி அண்ணாமலை ஜி.

6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள்,அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story