கவர்னர் மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்தால் தமிழக அரசு நிர்வாகமே முடங்கி விடுமா? - அண்ணாமலை


கவர்னர் மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்தால் தமிழக அரசு நிர்வாகமே முடங்கி விடுமா? - அண்ணாமலை
x

பாஜக ஆட்சிக்கு வரும்போது பிற கட்சிகளைப் போல மாறிவிடக்கூடாது என்று பயப்படுகிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

மதுரை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் நடைபெற்று வரும் தொழில்முனைவோர் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

எந்த கட்சியும் புனிதமான கட்சி என்று கூறமுடியாது. அரசியல் கட்சியைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையான நல்லவர்கள் இருந்தால் சிறப்பான கட்சி. தவறு செய்பவர்கள் இருந்தால் கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் மற்றொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வரும்போது பிற கட்சிகளைப் போல மாறிவிடக்கூடாது என்று நான் பயப்படுகிறேன். இன்று இருக்கும் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்போது மாறாமல் இதே நேர்மையை கடைபிடிக்குமா என்ற கேள்வியை நோக்கி, நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம். அதற்காக பாஜக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனம் அதலபாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. என்னால் நாவடக்கத்தை கடைபிடிக்க முடியாது. நான் அப்படித்தான் பேசுவேன். நான் பேசுவது பிடிக்கவில்லை எனில் காதைப் பொத்திக் கொண்டு செல்லுங்கள். கவர்னர் மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்தால் தமிழக அரசு நிர்வாகமே முடங்கி விடுமா? அரசு கொண்டுவரும் அனைத்து மசோதாவையும் ஏற்க வேண்டிய அவசியம் கவர்னருக்கு இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்தபின் அறநிலையத்துறை ஒரு கோவிலையாவது கட்டியிருக்கிறார்களா? கோவில் உண்டியல் பணத்தை வைத்து அதே கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தி மக்களை ஏமாற்றுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story