தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் - நயினார்நாகேந்திரன்


தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் - நயினார்நாகேந்திரன்
x

கோப்புப்படம்

ஆந்திரா, தெலுங்கானா போல தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பா.ஜனதாவின் நயினார்நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் என்று நெல்லையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக திமுக எம்.பி.ஆ.ராசாவின் மாநில சுயாட்சி வழங்க கோரிக்கை விடுத்ததை சுட்டிக்காட்டி பேசிய அவர், "தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம். ஆந்திரா, தெலுங்கானா போல தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம். இரண்டாக பிரிக்கக் கோரி தமிழகத்தில் இனி போராட்டம் நடைபெறலாம்" என்று அவர் கூறினார்.


Next Story