இளையராஜாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி பிறந்தநாள் வாழ்த்து!
இளையராஜாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இளையராஜாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய வாழ்த்துச்செய்தியில், "ஆழமான பக்தி மற்றும் இசை மீதான அர்ப்பணிப்பின் மூலம் கோடிக்கணக்கான நெஞ்சங்களை வென்றுள்ளீர்கள்.
இசை மீதான உங்களின் அசாதாரணமான பங்களிப்பு என்றும் தேசத்தின் பாரம்பரியமாக விளங்கும். உங்களின் மிகச்சிறந்த குணம் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடம். நீண்ட ஆரோக்கியத்துடன் இசைக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story