தமிழ்நாட்டில் 15 இடங்களில் இன்று சதமடித்த வெயில்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக சேலம், ஈரோடு உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக உள்ளது. சூரியனின் நேரடி தரிசனத்தால் இந்த பகுதிகள் அனைத்தும் கந்தக பூமியாக மாறியுள்ளது.
கத்தரி வெயில் தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், இப்போதே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் 15 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய இடங்கள்:
* ஈரோடு - 108.68
* திருப்பத்தூர் - 107.6
* சேலம் - 106.88
* வேலூர் - 106.7
* கரூர் பரமத்தி - 105.8
* தருமபுரி - 104.9
* திருச்சி - 104.54
* மதுரை விமான நிலையம் - 104.36
* திருத்தணி - 104.18
* மதுரை நகரம், தஞ்சாவூர் - 104
* கோவை - 103.64
* நாமக்கல் - 102.2
* பாளையங்கோட்டை - 101.3
* மீனம்பாக்கம் - 100.4