4 மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் நாளை இயங்கும்..!


4 மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் நாளை இயங்கும்..!
x
தினத்தந்தி 7 Dec 2023 8:46 PM IST (Updated: 7 Dec 2023 8:47 PM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும், டிசம்பர் 4ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது

இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை (டிசம்பர் 8) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story