திருத்தணி நகராட்சி அலுவலகம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 14 பேர் மீது வழக்குப்பதிவு


திருத்தணி நகராட்சி அலுவலகம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 14 பேர் மீது வழக்குப்பதிவு
x

திருத்தணி நகராட்சி அலுவலகம் எதிரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சார்பில் அம்பேத்கர் புகைப்படம் வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று உரிய அனுமதி இன்றி அம்பேத்கர் படம் வைக்கப்பட்டதாக கூறி கோர்ட் ஊழியர்கள் புகைப்படத்தை அகற்றியதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் திருத்தணி நகராட்சி அலுவலகம் எதிரே பத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பிரபு உள்ளிட்ட 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story