தமிழ்நாட்டில்தான் அயலக நலன் குறித்து பல நடவடிக்கை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழர்கள் இல்லாத நாடே இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3-ம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு அயலக தமிழர் தின விழாவை, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழா இன்று மற்றும் நாளை நடத்துகிறது.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் தான் அயலக நலன் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 135 நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழர்கள் இல்லாத நாடே இல்லை. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் அதை தீர்க்கும் பணியை அயலக நலத்துறை மேற்கொள்கிறது.
சுமார் 58 நாடுகளில் அதிகம் உள்ளனர். செய்திகளில் தமிழர்கள் சிக்கிக்கொண்டனர் என்று தகவல் கிடைத்தால், உடனே மீட்க நடவடிக்கை எடுக்கிறோம். வெளிநாடு செல்லும் வாய்ப்பை அயலக தமிழர் நலத்துறை ஏற்படுத்தி தருகிறது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கப்படுகின்றன. வெளிநாட்டில் இறந்து போகும் தமிழர்களின் உடல் 8 நாட்களுக்குள் தமிழகம் கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.