தேர்தல் போரில் எதிரியை ஓட ஓட விரட்ட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க.வுக்கு யாராலும் தடை போட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கடலூர்,
கடலூரில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 9 அடி உருவச் சிலையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
உழைப்புக்கு மரியாதை அளிக்கும் இயக்கம் அ.தி.மு.க. கட்சிக்காக உழைப்பவர்கள் மட்டுமே அ.தி.மு.க.வில் பதவிக்கு வரமுடியும். அதிக தொண்டர்களை கொண்ட இயக்கம் அ.தி.மு.க. எம்ஜிஆர், ஜெயலலிதா எனும் இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் இல்லை, அ.தி.மு.க. தொண்டர்களாகிய நாம் தான் அவர்களின் வாரிசுகள்.
காற்றுக்கு எப்படி தடை போட முடியாதோ, அதுபோல அ.தி.மு.க.வுக்கு யாராலும் தடை போட முடியாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் போரில் எதிரியை ஓட ஓட விரட்ட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.