அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
சென்னை,
பர்கூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மதியழகன் தலைமையில் அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மாற்றுக் கட்சியினர் 150 பேர், அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். பின்னர் அவர் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு வரவேற்பு தெரிவித்து, அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story