திருச்செந்தூரில் அகில பாரத இந்து மகாசபா கூட்டம்


திருச்செந்தூரில் அகில பாரத இந்து மகாசபா கூட்டம்
x
தினத்தந்தி 10 July 2023 6:45 PM GMT (Updated: 11 July 2023 8:51 AM GMT)

திருச்செந்தூரில் அகில பாரத இந்து மகாசபா கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் அகில பாரத இந்து மகா சபா ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர பொது செயலாளர் மணி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சேர்மதுரை, ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மண்டல தலைவர் சுந்தரவேல், மாநில செயலாளர் அய்யப்பன், நகர செயலாளர் கணேசன், நகர துணை தலைவர் அழகுத்துரை, நகர பொருளாளர் வீரபுத்திரமகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு சண்முகவிலாஸ் மண்டபத்தை சுற்றியுள்ள அடைப்புகளை திறக்க வேண்டும். மேலும், கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு கோவில் நிர்வாகம் நிரந்தர வாடகை கடை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி திருச்செந்தூர் இணை ஆணையர் அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.


Next Story