திருவள்ளூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது பொய் வழக்கு போட்டு ஜனநாயக விரோத செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் சதாசிவலிங்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொது செயலாளர் கோவர்தனன், பொன்னேரி நகர காங்கிரஸ் கட்சிதலைவர் கார்த்திகேயன், மீஞ்சூர் காங்கிரஸ் கட்சி தலைவர் துரைவேல்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் முன்பு நேற்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி. சிதம்பரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவரும், நகரமன்ற உறுப்பினருமான வக்கீல் ஜான் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஆனந்தன், மாநில செயலாளர் மோகன்தாஸ், அருள்மொழி, வடிவேலு, இளங்கோவன், பூண்டி ராஜா, வி.எஸ்.ரகுராமன், அமுதன், முகுந்தன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தபால் அலுவலகம் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளிப்பட்டு நகர தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடராஜு, மாநில செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புருஷோத்தம ரெட்டி அனைவரையும் வரவேற்றார். இதில் ராகுல்காந்தி மீது பொய்யான வழக்கை போட்டு அவரை அலைக்கழிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணம நாயுடு, வெங்கட ரத்தினம், சீனிவாசன், திருநிறைச்செல்வன், அண்ணியப்பன், காமராஜ், ராஜீவ் காந்தி, வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் மதன் மோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் பெரியசாமி, பிரேம் குமார், சிவா ரெட்டி, ஹேமகுமார், அஸ்வீன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திருத்தணியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருத்தணி நகர தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாத்தையா, முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் அன்பு, மாநில நெசவாளர் அணி தலைவர் சுந்தரவேலு, மாநில வக்கீல்கள் அணியை சேர்ந்த முருகன், மாவட்ட பொதுசெயலாளர் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.


Next Story