திண்டுக்கல்லில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை


திண்டுக்கல்லில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
x

திண்டுக்கல்லில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்,

மதுரையை தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள ஜெயபாரத் நிறுவனத்திற்கு சொந்தமான குவாரிகளில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சின்ன கரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 2 குவாரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமான நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகள், ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

வரி ஏய்ப்பு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் சோதனை நடத்தி வருதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story