செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா - 285 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா - 285 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x

சுதந்திர தின விழாவையொட்டி 285 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத், உடன் செல்ல போலீஸ் துறையின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்,

விழாவில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி 547 பேருக்கு நற்சான்று விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதனைதொடர்ந்து மொத்தம் 285 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் லட்சுமிபதி, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்துபாலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, வேளாண்மை இணை இயக்குனர். அசோக், தோட்டக்கலை துணை இயக்குனர் மோகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில் குமாரி, மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story