பிரதமர் மோடியின் ஆட்சியில் பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம் - அமைச்சர் மனோ தங்கராஜ்


பிரதமர் மோடியின் ஆட்சியில் பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
x

பிரதமர் மோடியின் ஆட்சியில் பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

கலவரங்கள் வரும்போது இணைய சேவையை முடக்குகிறீர்கள், விவசாயிகள் போராட்டம் போன்ற பிரச்சனைகள் வரும்போது சமூக வலைதளங்களையும், பத்திரிக்கைகளையும் கட்டுப்படுத்துகிறீர்கள், தேர்தல் வரும்போது எக்ஸ்-தள கணக்குகளையும் முடக்க முயற்சிக்கிறீர்கள்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதில் பாஜகவின் பங்கு என்ன என்பது ஊருக்கே வெளிச்சம். பா.ஜ.க.வினரை கட்டுப்படுத்தாமல் கருத்து சுதந்திரத்தில் கை வைப்பது மீண்டும் ஜனநாயகத்தை நசுக்கும் நடவடிக்கையே. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story