இந்தியா-இலங்கை இடையே 10-ந்தேதி சுற்றுலா கப்பல் சேவை தொடக்கம் - நாகையில் இன்று சோதனை ஓட்டம்


இந்தியா-இலங்கை இடையே 10-ந்தேதி சுற்றுலா கப்பல் சேவை தொடக்கம் - நாகையில் இன்று சோதனை ஓட்டம்
x

நாகை துறைமுகத்தில் இருந்து 14 ஊழியர்களுடன் இன்று சோதனை ஓட்டம் தொடங்கியது.

நாகை,

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான சுற்றுலா கப்பல் சேவை 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 10-ந்தேதி தொடங்க உள்ளது. இதற்காக கொச்சியில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'செரியாபானி' என்ற கப்பல் வடிவமைக்கப்பட்டு நாகைக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து கப்பல் பாதுகாப்பு குறித்து ஆராயும் விதமாக 14 ஊழியர்களுடன் நாகை துறைமுகத்தில் இருந்து இன்று சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்த கப்பல் 60 கடல் மைல் தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்கும் என கூறப்படும் நிலையில், கட்டணமாக ரூ.7,600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




Next Story