23ம் தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்


23ம் தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
x
தினத்தந்தி 15 Feb 2024 5:20 AM GMT (Updated: 15 Feb 2024 5:56 AM GMT)

தலைமை தேர்தல் ஆணையர் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை

இந்தியாவில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது. பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 23-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகளுடனும் ராஜீவ் குமார் ஆலோசனை மேற்கொள்வார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story