பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை; கைதான 8 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை; கைதான 8 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்
x

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலக சோதனையில் கைதான 8 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருவள்ளூர்

சட்டவிரோத பணம் பரிமாற்றம் மற்றும் நாசவேலைகளுக்கு சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில், தமிழகத்தை சேர்ந்த நிர்வாகிகளான காஜா மொய்தீன், சையது ஈசாக், யாசர் அராபத், பயாஸ் அகமது உள்ளிட்ட 8 பேரை என்.ஐ.ஏ. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நேற்று முன்தினம் மனு அளித்தனர். நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன் கைது செய்யப்பட்ட 8 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்ததுடன், வருகிற 1-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட 8 பேரையும் ஆஜர்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து வந்த நிலையில், கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இவர்களிடம் ரகசியமான இடத்தில் முழுமையான விசாரணை நடத்த உள்ளனர்.


Next Story
  • chat