கோவையில் 9-வது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது


கோவையில் 9-வது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது
x

இந்த திருவிழா இந்தியாவிலேயே கோவை அருகே பொள்ளாச்சியில் மட்டும் தான் நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பு.

கோவை,

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பொள்ளாச்சியில் வருடம்தோறும் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின் போது வெவ்வேறு நாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் வரவழைக்கப்படும். இந்த பலூன்களில் ஏறி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்யலாம்.

இந்த பலூன் திருவிழாவானது இந்தியாவிலேயே கோவை அருகே பொள்ளாச்சியில் மட்டும் தான் நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பு. இந்த திருவிழா நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் 9-வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கப்பட்டுள்ளது. இது பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவானது தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் பிரான்ஸ், ஜெர்மனி, வியட்நாம், நெதர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 10 பலூன்கள் வரவழைக்கப்பட்டு வானில் பறக்கவிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story