சர்வதேச தந்தையர் தினம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


சர்வதேச தந்தையர் தினம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை, ஆற்றலை, அன்பை, பண்பை, வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர் என்று சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அப்பாக்களின் தினம் இன்று! உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை - ஆற்றலை -அன்பை - பண்பை - வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்!

தந்தையர் தினத்தில் எந்தையை நினைத்து வணங்குகிறேன்! எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன்!" என்று கூறியுள்ளார்.Next Story