கிண்டியில் ஐ.டி.ஐ. ஆசிரியர்கள் போராட்டம்


கிண்டியில் ஐ.டி.ஐ. ஆசிரியர்கள் போராட்டம்
x

கிண்டியில் ஐ.டி.ஐ. ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசு திறன் மேம்பாட்டு மைய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு திறனை பரிசோதிக்க உதவாத கணினி மூலம் நடக்கும் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். கணிதம், வரைபடம் பயிற்சி நேரத்தை குறைத்ததை ரத்து செய்ய வேண்டும். தேசிய திறன் தகுதியை குறைத்ததை திரும்ப பெற வேண்டும். என்.டி.சி., என்.ஏ.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிப்ளமோ சான்று வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் அன்பரசு, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பொன்முடி, சங்க நிர்வாகிகள் ரமேஷ், திருநாவுக்கரசு, சுப்பிரமணியன் உள்பட ஐ.டி.ஐ. ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story