ஆந்திராவில் ஊழலை தடுக்க புதிய செயலி - ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்


ஆந்திராவில் ஊழலை தடுக்க புதிய செயலி - ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்
x

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து இந்த செயலியில் புகார் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

அதிகாரிகள் ஊழல் செய்வது குறித்தும், லஞ்சம் வாங்குவது குறித்தும் புகார் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு நேரில் செல்வதற்கு பதிலாக, செல்போன் மூலம் புகார் தெரிவிக்க புதிய செயலியை லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கியுள்ளது.

'ஏசிபி 14400' (ACB 14400) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை தடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து, ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த செயலியில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து புகார் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story