கஞ்சா விற்ற 5 பேருக்கு சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


கஞ்சா விற்ற 5 பேருக்கு சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x

கஞ்சா விற்ற 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை

சென்னை தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. பஸ் நிலையத்தின் பின்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையை சேர்ந்த அக்பர்கான் (வயது 26), லோகநாதன் (24), மணிகண்டன் (24), கொருக்குபேட்டையை சேர்ந்த மெல்கி (26), கிருஷ்ணா (22) ஆகியோரை 2020-ம் ஆண்டு ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி திருமகள் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் சரவணன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, அக்பர்கான் உள்ளிட்ட 5 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அக்பர்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.70 ஆயிரம் அபராதமும், மற்றவர்களுக்கு தலா 2½ ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story