காஞ்சீபுரத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டபணிகள் ஆய்வு கூட்டம் - மத்திய மந்திரி தலைமையில் நடந்தது


காஞ்சீபுரத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டபணிகள் ஆய்வு கூட்டம் - மத்திய மந்திரி தலைமையில் நடந்தது
x

காஞ்சீபுரத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டபணிகள் ஆய்வு கூட்டம் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடந்தது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் ஜல்ஜீவன் மிஷன் திட்டபணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடைபெற்றது.

அவர் பேசுகையில்:

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல்ஜீவன் மிஷன் திட்டப்பணிகள், தூய்மைபாரத திட்டத்தின் பணிகள் மற்றும் குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இத்திட்டங்கள் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் முடிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 124.94 லட்சம் வீடுகளில் 69.50லட்சம் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காஞ்சீபுரம் மாவட்டம் இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தி மத்திய அரசிடம் விருது பெற்றுள்ளது. அதேபோல் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறைகள் அமைக்கும் பணியினை இந்த மாவட்டம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்ககிறேன்.

கடந்த ஓராண்டு காலமாக தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்ததி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்திற்கு பிறகு, திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளிடம் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்துரையாடினார்.

இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி, மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, இந்திய அரசின் ஜல்சக்தி துறை இயக்குநர் விஸ்வ கண்ணன், தமிழக ஜல்சக்தி துறை கூடுதல் இயக்குநர் ஆனந்த ராஜ், தனிசெயலர் உதய சவுத்ரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story