ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ராவணன் காலமானார்


ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ராவணன் காலமானார்
x

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகரான ராவணன் இன்று காலமானார்.

திருச்சி,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக செயல்பட்ட ஆர்.பி. ராவணன் திருச்சியில் மகனுடன் வசித்து வந்த நிலையில் திடீரென இன்று (செப்டம்பர் 21) மாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

அவருடைய இறுதி சடங்குகள் நாளை அவருடைய சொந்த கிராமமான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் நடைபெற உள்ளது. அவருடைய மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story